போலீஸ் செய்திகள்...
பெட்ரோல் பங்க் ஊழியர் தற்கொலை
தேனி: அல்லிநகரம் கக்கன்ஜி காலனி கார்த்திக் 33. பெட்ரோல் பங்க் ஊழியர். மனைவி துர்கா 27. கார்த்திக்முதுகுதண்டுவட பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஜூலை 13ல் மாமனார் வீட்டில் இருந்த மனைவியை பார்க்க மதுபோதையில் வந்த கார்த்திக்கை மனைவி கண்டித்தார். விரக்தி அடைந்த கார்த்திக் தனது வீட்டிற்கு சென்றுதுாக்கிட்டுக்கொண்டார். வெகுநேரம் வீட்டிற்கு கணவர் வராததால் மனைவி துர்கா தந்தையுடன் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது கணவர் துாக்கிட்டு மயங்கிய நிலையில் இருந்தார். உடலை இறக்கி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உடலை வீட்டிற்கு கொண்டு சென்றனர். இந்த விபரம் அல்லிநகரம் போலீசாருக்கு தெரியவர, போலீசார் துர்காவின் வீட்டிற்கு வந்து உடலை 108 ஆம்புலன்சில் ஏற்றி, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை நடந்து வருகிறது.
மில் தொழிலாளி உயிரிழப்பு
தேனி: பாரஸ்ட் ரோடு 3வது தெரு கருப்பசாமி 45. மர அறுவை மில்லில் பணிபுரிகிறார். வேலை கிடைக்காததால் விரக்தியில் மது குடித்தார். ஜூலை 13 இரவு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்ப வில்லை. மறுநாள் சிவாஜிநகர் டாஸ்மாக் கடைக்கு அருகே இறந்து கிடந்தார். தேனி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
சுவர், தகர செட் சேதம்: 11 பேர் மீது வழக்கு
தேனி: அல்லிநகரம் நடுத்தெரு நாகராஜ் 56. இவர் தேனி மாஸ்டர் பிளான் காம்ப்ளக்ஸ் ரோட்டில் தனக்கு சொந்தமான 5 சென்ட் இடத்தில் காம்ப்பவுண்டு சுவர்அமைத்து தகர செட் அமைத்திருந்தார். ஜூலை 12ல் மதியம் என்.ஆர்.டி., நகரில் தனியார் மருத்துவமனைக்குசென்று சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நண்பர் பிரபாகரன் அலைபேசி மூலம், குன்னுாரை சேர்ந்த இளையராஜா, மற்றும்அடையாளம் தெரியாத நபர்கள் இடத்திற்குள் நுழைந்து ரூ.54 ஆயிரம் மதிப்புள்ள கேட், மின்சாதன பொருட்கள், சிமென்ட் மூடைகளைசேதப்படுத்தி, இரும்பு பைப்புகளை திருடிச் சென்றதாக நாகராஜ் புகாரில் தேனி இன்ஸ்பெக்டர் ஜவஹர், இளையராஜா உட்பட 10க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
டெக்ஸ்டைல் நிறுவனம் சேதம்
நால்வர் மீது வழக்கு
தேனி: குன்னுாரை சேர்ந்தவர் இளையராஜா 43. இவருக்கும், தேனி கே.ஆர்.ஆர்., நகர் வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன், முல்லைநகர் பாலசுந்தர்ராஜ், ஆனந்தன்,அரணமனைப்புதுார் நாகேந்திரனுக்கும் பஞ்சமி நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. சந்தானகிருஷ்ணன் பாலசுந்தராஜ், ஆனந்தன்,நாகேந்திரன் உட்பட பலர் பாரஸ்ட் ரோடு 11வது தெருவில் உள்ள இளையராஜாவின் டெக்ஸ்டைல் நிறுவனத்திற்குள் நுழைந்து ரூ.7.50 லட்சம்மதிப்புள்ள தையல் மிஷின்களை சேதப்படுத்தினர். வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன் கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து கல்லாவில் இருந்த ரூ.21,500 எடுத்து சென்றனர் என இளையராஜா புகாரில், வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன் உட்பட நால்வர் மீது தேனி எஸ்.ஐ., இளங்குமரன் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றார்.
ரூ.1.64 லட்சம் மதிப்பிலான
லாட்டரியுடன் இருவர் கைது
கம்பம்: வடக்கு எஸ்.ஐ. நாகராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மெயின்ரோட்டில் டிராபிக் சிக்னல் அருகில் நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். இவர்கள் பிள்ளையார் பட்டியை சேர்ந்த குணசேகரன் 36, திருமயத்தை சேர்ந்த வடிவேல் 44 என தெரியவந்தது. அவர்களிடம் ரூ. ஒரு லட்சத்து 64 ஆயிரம் மதிப்புள்ள 2684 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கேரளாவில் இருந்து வாங்கி புதுக்கோட்டை மாவட்டத்தில் விற்பனை செய்ய இருந்தது தெரிய வந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர். கம்பம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.