சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி பலி
தேவதானப்பட்டி: கொடைக்கானல் மலை அடிவாரம், பெரியகுளம் ஒன்றியம், காமக்காபட்டி, கெங்குவார்பட்டி பகுதியில் மூன்று மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது. ஐந்து ஆட்டுக்குட்டிகள், மூன்று மாடுகள், இரு கன்றுக்குட்டிகளை சிறுத்தை தாக்கி கொன்றது. பெரியகுளம் ரேஞ்சர் ஆதிரை காமக்காபட்டி பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய மரங்களில் இரு கேமராக்களை பொருத்தினார்.
இதில் எவ்வித பதிவும் இல்லை. இதனால் விவசாயிகள் தனியாக செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் ஒரு மாதம் இடைவெளிக்கு பின் காமக்காபட்டி முருகன் தென்னந்தோப்பில் அமராவதி வளர்த்து வந்த கன்றுக்குட்டியை நேற்று சிறுத்தை அடித்து கொன்றது. வனத்துறை இனியும் காலம் தாழ்த்தாமல் சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி உள்ளனர்.
--
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement