வெறி நாய் கடித்து 11 பேர் காயம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் நேற்று வாரச்சந்தை என்பதால் நகர் மற்றும் சுற்று கிராமங்களில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் வந்திருந்தனர்.

நேற்று மாலை 6:30 மணிக்கு வாரச்சந்தை நாடார் தெரு, ஓடைத்தெரு மெயின் ரோடு உட்பட பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று பலரையும் கடித்து சென்றுள்ளது.

வெறி நாய் கடித்ததில் காயமடைந்த ஆண்டிபட்டியை சேர்ந்த ஸ்ரீ சக்தி 20, முத்து ஹரீஸ் 11, தேவதர்ஷினி 14, முத்து 52, தாட்சாயினி 8, ராமர் 37, நாச்சியார்புரம் பாக்யராஜ் 43, பிச்சம்பட்டி செல்வராணி 48, ஆவாரம்பட்டி வேல்முருகன் 39, வைகைப்புதூர் செல்வபிரியா 25, ஏத்தக்கோயில் வாசிநாதன் 25 ஆகிய 11 பேர் பாதிக்கப்பட்டு ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

Advertisement