பிறந்த நாள் விழா மருத்துவ முகாம்

தேனி: தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் மாநில செயலாளர் ராஜனின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி வைகை அரிமா சங்கம், வைகை ஸ்கேன், திரவியல் கல்வி நிறுவனங்களின் சார்பில், இலவச மருத்துவ முகாம், மலைவாழ் மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருமண மஹாலில் நடந்தது.
தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன் துவக்கி வைத்தார். விழாவில் டாக்டர்கள் பாண்டியராஜன், ஜீவா, திருமலைச்சாமி குழுவினர் பங்கேற்று நோயாளிகளை பரிசோதனை செய்து, ஆலோசனைகளை வழங்கினர்.
விழாவில் எம்.எல்.ஏ., சரவணக்குமார், தென்மண்டல வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் செயலாளர் முத்துராமலிங்கம், அரிமா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜமோகன், பொறியாளர் ராதாகிருஷ்ணன், ஆடிட்டர் ஜெகதீஸ், வைகை அரிமா சங்க தலைவர் ராஜேந்திரா பைப்ஸ் நிறுவன உரிமையாளர் கணேஷ், தி.மு.க., தெற்கு மாவட்ட நிர்வாகி ரவி, தேனி தி.மு.க., வடக்கு நகரப் பொறுப்பாளர் பாலமுருகன், லைப் கல்வி நிறுவனங்களின் தாளாளர் நாராயணபிரபு, குறிஞ்சி பைனான்ஸ் நிர்வாகி சுரேந்திரன் உள்ளிட்ட பலர் வாழ்த்தினர்.
தொண்டு நிறுவனங்களின்கூட்டமைப்பின் மாநில செயலாளர் ராஜன் ஏற்புரை வழங்கினார்.
மேலும்
-
வள்ளலாரின் புகழை தி.மு.க., திட்டமிட்டு மறைக்கிறது: வடலுாரில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி ஆவேசம்
-
சினிமாவில் சரி என்பதை அரசியலில் தவறு என்பதா?
-
'கைது செய்ய வேண்டும்': கிருஷ்ணசாமி
-
ரயில் விபத்தில் இறந்த மாணவர்கள் குடும்பத்திற்கு திருமாவளவன் உதவி
-
மனு கொடுக்க வந்த பொதுமக்களை போலீசார் தடுத்ததால் வாக்குவாதம்
-
அமலோற்பவம் பள்ளியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி