பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் நியமனத்தில் ஊழல்; மாஜி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

காரைக்கால் : புதுச்சேரி மாநிலத்தில் புதிய பா.ஜ.. எம்.எல்.ஏக்கள் நியமனத்தில் மிகப்பெரிய ஊழல் மற்றும் பணம் கை மாறியுள்ளதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட் டியுள்ளார்.

காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று கலந்துகொண்ட புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நிருபரிடம் கூறியதாவது:

புதுச்சேரி பா.ஜ.,- என்.ஆர்.காங்., இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதை மறைப்பதற்காக பூசி மெழுகி வருவதாகவும் அதிகாரிகள் நியமனத்தில் முதல்வர் நடத்திய ராஜினாமா நாடகம் கவர்னரிடம் எடுபடவில்லை. மேலும் நான்கு ஆண்டுகள் இரண்டு மாதம் முடிவடைந்த நிலையில் நியமன எம்.எல்.ஏக்கள் ராஜினாமா ஏன் என்று பா.ஜ., விளக்கவில்லை. தற்போது புதிதாக மூன்று நியமன எம்.எல்.ஏக்கள் நியமித்ததில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.

இதற்கு பணம் கைமாறி உள்ளது. பணத்தை பெற்ற பிறகு தான் பா.ஜ.,எம்.எல்.ஏ. பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் முதல் முறையாக ஆதிதிராவிடர் அமைச்சராக இல்லாத ஒரு அமைச்சரவை உருவாக்கி தலித் விரோத கட்சிகள் என பா.ஜ., என்.ஆர்,கூட்டணி அரசு நிரூபித்துள்ளது.

மேலும் இந்து கோவில் சொத்துக்களை பாதுகாப்பதாகவும் கூறிக் கொள்ளும் பா.ஜ., புதுச்சேரி காமாட்சி அம்மன் கோவில் நில மோசடி வழக்கில் தொடர்புடைய ஜான்குமாரை அமைச்சராக நியமித்தது குறித்து பா.ஜ., புதுச்சேரி தலைமை மற்றும் அகில இந்திய தலைமை , பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் எனக் கூறினார்.

Advertisement