விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் 15ம் தேதி நடக்கும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில், பொது மக்கள் பங்கேற்று பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
லட்சுமணன் எம்.எல்.ஏ., அறிக்கை:
தமிழக அரசின் பல்வேறு சேவைகள் அனைத்து மக்களையும் நேரடியாக சென்றடைவதற்காக, முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ள உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வரும் 15ம் தேதி துவங்குகிறது.
விழுப்புரம் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட விழுப்புரம், வானுார் சட்டசபை தொகுதிகளிலும் இந்த முகாம்கள் நடக்கிறது. தி.மு.க., அரசால் முகாம்கள் நடத்தப்படுவதை மக்கள் உணரும் வகையில், கட்சியினரின் பங்களிப்பு இருக்க வேண்டும்.
குறிப்பாக, முகாம்கள் நடக்கும் இடம், நாள் ஆகியவற்றை கட்சி சார்பில், பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முகாம் நாள், இடம் விபரங்கள் 5 நாட்களுக்கு முன்பாகவே அந்தந்த நகர, ஒன்றிய பேரூர் கழக செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். முகாம் நடக்கும் இடங்களுக்கு பொது மக்களை அழைத்து வரும் பணியை கட்சியினர் மேற்கொள்ள வேண்டும்.
முகாமிற்கான ஏற்பாடுகளை செய்து, மக்களுக்கு விண்ணப்பங்களை எழுதி தருதல், அலுவலர்களிடம் அழைத்துச் சென்று உதவும் பணிகளை கட்சியினர் மேற்கொள்ள வேண்டும்.
நகர, ஒன்றிய, பேரூராட்சி சார்பில், முகாம்கள் நடக்கும் இடங்களில், பொது மக்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் உரிய வசதிகளை செய்து தர வேண்டும். முகாம் படங்களை தலைமைக்கு அனுப்பியும், சமூக வலை தளங்களிலும் பதிவிட வேண்டும்.
தமிழக அரசு துறைகள் இணைந்து நடத்தும் இந்த முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
சோறுபோட பள்ளி என்ன ஹோட்டலா என கேட்போர் அன்று இல்லை; முதல்வர் ஸ்டாலின் சாடல்
-
நம் குழந்தைகள் ஹிந்தி கற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை: ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் ஆதரவு
-
114 வயது மாரத்தான் 'ஜாம்பவான்' பவுஜா சிங் சாலை விபத்தில் மரணம்!
-
வள்ளலாரின் புகழை தி.மு.க., திட்டமிட்டு மறைக்கிறது: வடலுாரில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி ஆவேசம்
-
சினிமாவில் சரி என்பதை அரசியலில் தவறு என்பதா?
-
'கைது செய்ய வேண்டும்': கிருஷ்ணசாமி