மாவட்ட அளவில் கபடி போட்டி  செயின்ட் ஜோசப் அணி அசத்தல்

சென்னைஅம்பத்துாரில் நடந்த மாவட்ட அளவிலான கபடி போட்டியில், செம்மஞ்சேரி செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி முதலிடம் பெற்றது.

திருவள்ளூர் மாவட்ட கபடி கழகத்துடன் இணைக்கப்பட்ட, பாரத் விளையாட்டு குழு சார்பில், இரண்டு நாள் கபடி போட்டி, அம்பத்துார், பெரியார் நகரில் நடந்தது.

போட்டியில், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு கல்லுாரி மற்றும் கபடி குழுக்கள் பங்கேற்றன.

பெண்களுக்கான காலிறுதி போட்டியில், செம்மஞ்சேரி செயின்ட் ஜோசப் கல்லுாரி, 30 -- 15 என்ற புள்ளிகள் கணக்கில், மேட்டுக்குப்பம் எம்.எஸ்.சி., அணியை தோற்கடித்தது.

தொடர்ந்து நடந்த அரையிறுதி போட்டியில், செயின்ட் ஜோசப் கல்லுாரி, 50 -- 10 என்ற அபார புள்ளிகள் கணக்கில், சென்னை மகளிர் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது.

விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி மற்றும் பாரத் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகள் மோதின.

துவக்கத்திலிருந்து செயின்ட் ஜோசப் பணி ஆதிக்கம் செலுத்தி, 30- - 14 என்ற கணக்கில் வெற்றி பெற்று, முதல் இடத்தைப் பிடித்து, 50,000 ரூபாய் ரொக்கப் பரிசை தட்டி சென்றது.

***

Advertisement