எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனையில் மகளிருக்கு இலவச முழு உடல் பரிசோதனை

சென்னை, எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனையின் ஆறாம் ஆண்டு நிறைவையொட்டி, பெண்களுக்கு கட்டணமில்லா முழு உடற்பரிசோதனை மற்றும் ஆம்புல்னஸ் சேவை துவங்கப்பட்டு உள்ளது.

சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனையின் ஆறாம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி, பெண்களுக்கான 'நம்ம ஹெல்த்' அட்டை அறிமுகம் செய்யப்பட்டது.

மேலும், 10 கி.மீ., சுற்றளவில், கட்டணமில்லா ஆம்புலன்ஸ் சேவை பெறும் திட்டத்தை, மருத்துவமனை மேலாண் இயக்குனர் பிரசாந்த் ராஜகோபாலன், அண்ணாநகர் துணை கமிஷனர் பூக்கியா ஸ்நேகா பிரியா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதுகுறித்து, மருத்துவமனையின் மேலாண் இயக்குனர் பிரசாந்த் ராஜகோபாலன் கூறியதாவது:

'நம்ம ஹெல்த்' அட்டை, ஆறு தனித்தன்மை வாய்ந்த நன்மைகளை உள்ளடக்கியது. பெண்கள் கட்டணமின்றி, முழு உடற்பரிசோதனையை செய்து கொள்ளலாம்.

புறநோயாளிகள் பிரிவில் மருத்துவ ஆலோசனை, நோயறிதல் பரிசோதனை, மருந்து, உயர்தர பரிசோதனை ஆகிய கட்டணங்களில் சிறப்பு தள்ளுபடி வசதி உள்ளது.

மருத்துவ காப்பீடு இல்லாத நோயாளிகளுக்கு, குறைந்த கட்டணத்தில் அறை வசதி ஏற்படுத்தப்படும்.

மேலும், 10 கி.மீ., சுற்றளவில் இருப்பவர்களுக்கு, இலவச ஆம்புலன்ஸ் சேவையையும் வழங்கி உள்ளோம். இவை, நோயாளிகள் மீது நாங்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

***

Advertisement