எம்.துரைச்சாமிபுரத்தில் பெண்கள் காலி குடங்களுடன் மறியல்

சிவகாசி: சிவகாசி அருகே எம்.துரைச்சாமிபுரம் அம்பேத்கர் தெருவில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என பெண்கள் காலி குடங்களுடன் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.

சிவகாசி அருகே எம்.துரைச்சாமிபுரம் அம்பேத்கர் தெருவில் ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. மேலும் வாறுகால், ரோடு, சுகாதார வளாகம் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் சிவகாசி நதிக்குடி ரோட்டில் காலிகுடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாரனேரி போலீசார் அவர்களிடம் அடிப்படை வசதி செய்து தர வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தகவல் தெரிவித்து பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டனர். மறியலால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement