ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் ரோட்டரி சங்க நான்காம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.

ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கி வரவேற்றார். செயலாளர் கோதம்சந்த் ஆண்டறிக்கை வாசித்தார். சாசன தலைவர் வாசன், மண்டல துணை ஆளுநர் சுரேஷ் புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தனர்.

மாவட்ட ஆளுநர் செந்தில்குமார் தலைமை உரையாற்றினார்.

மாவட்ட தலைவர் சேவை திட்டங்கள் தேவசேனாதிபதி வாழ்த்தி பேசினார். புதிய தலைவராக கோதாம்சந்த், செயலாளராக ராஜேஷ்குமார், பொருளாளராக காமராஜ் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

சேவை திட்ட தொடக்க நிகழ்ச்சியாக மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Advertisement