இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

விழுப்புரம் : இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் அடுத்த ஆனாங்கூரைச் சேர்ந்தவர் சேகர் மகள் பிரியங்கா, 27; இவர், கடந்த 12ம் தேதி விழுப்புரம் மருதுாரில் உள்ள தனியார் பள்ளியில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங் களில் தேடியும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement