மதுபாட்டில் விற்றவர் கைது

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் மற்றும் போலீசார் நேற்று காலை 11:00 மணிக்கு மூரார்பாளையம் டாஸ்மாக் கடையின் அருகே சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, கள்ளக்குறிச்சி, சித்தேரி தெருவைச் சேர்ந்த ஜான்கென்னடி மகன் தனவேந்திரன், 36; நாராயணன் மகன் சீனுவாசன் ஆகியோர் மதுபாட்டில் விற்பனை செய்தது தெரிந்தது.

இதனையடுத்து தனவேந்திரனை போலீசார் கைது செய்து, தப்பியோடிய சீனுவாசனை தேடி வருகின்றனர். மேலும் 10 குவாட்டர் பாட்டில், 200 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Advertisement