பா.ம.க., செயற்குழு கூட்டம்

மயிலம் : விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ம.க., செயற்குழு கூட்டம் கூட்டேரிப்பட்டில் நடந்தது.
மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார் தலைமை தாங்கினார். தேர்தல் பணிக்குழு செயலாளர் ஜெயராமன், மாநில செயற்குழு உறுப்பினர் செங்கேணி முன்னிலை வகித்தனர். உழவர் பேரியக்க செயலாளர் வேலுசாமி, கொள்கை பரப்பு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பேசினர்.
மாநில இளைஞர் சங்க செயலாளர் பிரேம்குமார், அமைப்பு செயலாளர் பழனி வேல், நிர்வாகிகள் பிரபு, செல்வம், ராஜேந்திரன், வெங்கடேசன், செல்வராஜ், முருகன், நந்த கோபால், ஒன்றிய செயலா ளர்கள் தேசிங்கு, முத்துகிருஷ்ணன், ராமமூர்த்தி, சண்முகம், ராஜி உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத கல்வி, வேலைவாய்ப்பில் தனி ஒதுக்கீட்டை அரசு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 20ம் தேதி மாநில தலைவர் அன்புமணி தலைமையில் விழுப்புரத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்பது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தேசிங்கு நன்றி கூறினார்.
மேலும்
-
சேதமடைந்த சிறு பாலம் சீரமைப்பது எப்போது?
-
மின்விளக்கு கம்பம் மாயம்: மின்வாரியம் பாராமுகம்
-
நெய்வேலியில் விவசாயிகளுடன் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிச்சாமி ஆலோசனை
-
சீன அதிபருடன் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு
-
பொது மேடையில் ஸ்டாலினுடன் விவாதத்திற்கு தயார்: பழனிசாமி பேச்சு
-
கர்நாடகாவில் இனி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ்; காங். அரசு அறிவிப்பு