பெண்ணை மிரட்டியவர் கைது

விழுப்புரம் : பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த ஜானகிபுரத்தைச் சேர்ந்தவர் அப்துல் கரீம் மனைவி அபிபுநிஷா, 50; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் வீரப்பன், 40; இருவருக்கு மிடையே வீட்டுமனை தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது.

இது குறித்து ஏற்கனவே அபிபுநிஷா கொடுத்த புகாரின்பேரில், வீரப்பன் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அபிபுநிஷாவை, வீரப்பன் கத்தியைக் காட்டி மிரட்டினார்.

புகாரின் பேரில், வீரப்பன் மீது விழுப்புரம் தாலுகா போலீசார், வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.

Advertisement