தேனி மருத்துவக்கல்லுாரி குப்பை கொட்ட... வழியின்றி தவிப்பு: சுகாதார சீர்கேட்டால் மாணவர்கள் பாதிப்பு

தேனி: தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேகரமாகும் குப்பையை கொட்டுவதற்கும், அதனை மறுசுழற்சி செய்ய இடம்இல்லாததால் தினமும் சேகரமாகும். 1.6 டன் குப்பையை அகற்ற வழியின்றி கல்லுாரி நிர்வாகம் தவித்து வருகிறது. இதனால் ஏற்படும் சுகாதாரக்கேடால் நோயாளிகள், மாணவர்கள் பாதப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
இக்கல்லுாரி கடந்த 2004ல் துவங்கப்பட்டது. துவக்கத்தில் 300 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை தற்போது 1300 படுக்கை வசதிளை பெற்றுள்ளது. அதிதீவிரசிகிச்சை, விபத்து அறுவை சிகிச்சை பிரிவு, ஒருங்கிணைந்த தாய் சேய் நல சிகிச்சை மையம், பச்சிளங்குழந்தைகள் பிரிவு உட்பட பிற பிரிவுகள் செயல்படுகின்றன. இக் கல்லுாரியில்இருந்து நாள் ஒன்றுக்கு 1.6 டன் குப்பை சேகரமாகிறது. இதனை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் மருத்துவக்கல்லுாரிக்கு அருகில் உள்ளதிருமலாபுரம் ஊராட்சி நிர்வாகம் குப்பையை அகற்றி மறுசுழற்சி செய்தது. குப்பை கொட்டும் இடத்தில் பொது மக்கள் பிரச்னை ஏற்பட்டு, ஊராட்சிநிர்வாகம் மருத்துவக் கல்லுாரியில் குப்பை அகற்ற மறுப்பு தெரிவித்தது.
உருவான ராட்சஷ குழிகள்:
அதன் பின் டீன் குடியிருப்பிற்கு எதிரே உள்ள காலியிடத்தில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் ராட்ஷத குழிகள் தோண்டி சேகரிக்கப்படும் குப்பை கொட்டப்பட்டு வந்தன. தற்போது அந்த இடத்தில் தொடர்ந்து குப்பை கொட்ட இயலாத நிலையும், வேறு இடம் பார்க்கும்பணியும் நடந்து வந்தன. மலை போல் குவிந்த குப்பையில், மேலும் குப்பை கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு, துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனால்நோயாளிகள், மாணவர்கள், பேராசிரியர்கள் பாதிக்கப்படுவதாகவும், வேறு இடத்தை தேர்வு செய்து குப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நகராட்சி மறுப்பு:அவர்கள் கூறியதாவது: மருத்துவக்கல்லுாரியில் சேகரமாகும் குப்பையை தேனி நகராட்சி நிர்வகிக்கும் தப்புக்குண்டு குப்பைக்கிடங்கில்கொட்டுவதற்கு அனுமதி கோரியது. அப்பகுதி மக்கள் எதிர்ப்பால், நகராட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. இதனால் இடம் தேர்வில் என்ன செய்வது எனகல்லுாரி நிர்வாகம் தவித்து வருகிறது. கலெக்டர் தலையிட்டு, பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவும், மருத்துவக் கல்லுாரியின் சுகாதாரம் பாதுகாக்க நடவடிக்கை வேண்டும் என்றார்.