வழிப்பறி சம்பவங்களை தடுக்க எட்டிமடையில் சோதனை சாவடி
கோவை; எட்டிமடை - வாளையார் இடையேயான பகுதியில், சமீபகாலமாக வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஐந்து மாதங்களில் மட்டும், ஐந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன.
இதையடுத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த எட்டிமடை - வாளையார் இடையே புதிதாக சோதனை சாவடி ஏற்படுத்த, மாவட்ட போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
எஸ்.பி., கார்த்திகேயன் கூறுகையில்,''எட்டிமடை - வாளையார் இடையேயான பாதை, 10 கி.மீ., நீளமுடையது. இதில் ஏற்கனவே வாளையார், வேலந்தாவளம் பகுதிகளில் இரு சோதனை சாவடிகள் உள்ளன. இங்கு போலீசார் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும்.
எட்டிமடையில் புதிய சோதனை சாவடி அமைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் பிரத்யேகமாக எஸ்.ஐ., தலைமையில் ரோந்து பணி மேற்கொள்ளப்படும். சோதனை சாவடிகளில் வாகனத் தணிக்கை நடத்தப்படும்.
தற்போது மாவட்டத்தில், 14 சோதனை சாவடிகள் உள்ளன. அவற்றில், 10 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படுகின்றன. நான்கில் பழுதடைந்த கேமராக்களை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் நிதி வழங்க உள்ளது.
மேலும், சில பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. வழிப்பறியை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார்.
மேலும்
-
645 பணியிடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு அறிவிப்பு
-
முத்துக்குமார சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா
-
மேம்பால சுவர் பூங்காக்கள் திருமங்கலத்தில் அலங்கோலம்
-
ரயில்வே துறை சீரழிவுக்கு தனி பட்ஜெட் ரத்துதான் காரணம்: ராமதாஸ் குற்றச்சாட்டு
-
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம்; மக்களிடம் மனுக்களை பெற்றார் முதல்வர் ஸ்டாலின்!
-
சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லி கற்கள்; விபத்தில் சிக்கும் அபாயம்