இந்திய ஐக்கிய கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் இந்திய ஐக்கிய கம்யூ., சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆண்டிபட்டி - தெப்பம்பட்டி ரோடு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கோபால் தலைமை வகித்தார்.

ஆண்டிபட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்தும், ஆண்டிபட்டி பகுதியில் கொள்ளைபோகும் கனிம வளங்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம், விவசாயிகளின் நிலத்தை சர்வே செய்ய சர்வே மற்றும் வருவாய் துறையினர் மேற்கொள்ளும் கட்டாய வசூல் ஆகியவற்றை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மாவட்டத் துணைச் செயலாளர் அபுதாஹிர் உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பெண்கள் உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Advertisement