அமலோற்பவம் பள்ளியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

புதுச்சேரி : புதுச்சேரி அமலோற்பவம் பள்ளியில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி, அமலோற்பவம் லூர்து அகாதமி இணைந்து மாணவர்களுக்கு வாரந்தோறும் வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. அந்த வகையில், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகளின் புதுமைகள் என்னும் தலைப்பிலான வழிகாட்டுதல் நிகழ்ச்சி அமலோற்பவம் லுார்து அகாதமி உள்ளரங்கில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி டில்லிபாபு பங்கேற்று 'இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகளின் புதுமையான கண்டுபிடிப்புகள்'என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து இந்தியாவின் முதன்மையான அமைப்பாகத் திகழும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகள், அதன் முக்கியத்துவம், அதில் உள்ள பணிவாய்ப்புகள் குறித்த பல்வேறு விளக்கங்களை வழங்கியதோடு, இந்நிறுவனத்தில் உள்ள ஏழு முக்கிய பிரிவுகளை அறிமுகப்படுத்தி, அதன் அமைப்பு நிலைகள், அதில் உள்ள உயர் பதவிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.

விழாவில், 2004ல் நடைபெற்ற தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் விருது பெற்ற மாணவர்களுக்கு வெள்ளிக்காசுகள் பரிசு வழங்கப்பட்டது.

பள்ளி முதல்வர் ஆண்டோனியஸ் பிரிட்டோ நன்றி கூறினார்.

Advertisement