விருதை கோவில்களில் சதுர்த்தி வழிபாடு

விருத்தாசலம் : சங்கடஹர சதுர்த்தியொட்டி விருத்தாசலம் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள ஆழத்து விநாயகர் சுவாமிக்கு, சங்கடஹர சதுர்த்தியொட்டி நேற்று காலை 10:30 மணிக்கு, சிறப்பு அபிஷேகமும், அருகம்புல் மாலை சாற்றி தீபாராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார்.
அதேபோல், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் உள்ள சித்தி விநாயகர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அருகம்புல், வெற்றிலை, தாமரை மாலை அலங்காரத்தில் சித்தி விநாயகர் அருள்பாலித்தார். ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், விருத்தாசலம் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில்களில் சதுர்த்தி வழிபாடு நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மிளகாய் பொடி தூவி, துப்பாக்கியால் சுட்டு இ.கம்யூ., பிரமுகர் படுகொலை; வாக்கிங்கின் போது பயங்கரம்
-
மும்பை ஏர்போர்ட்டில் சிக்கியது ரூ.62 கோடி கோகைன்: பிஸ்கட், சாக்லேட்டுகளில் கடத்திய பெண்
-
திருப்பரங்குன்றம் மலை விவகார வழக்கு: விசாரணையை ஒத்திவைத்தார் 3வது நீதிபதி
-
ஜம்மு காஷ்மீரில் 20 பேருடன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வேன்: 5 பேர் பலி
-
சேலத்தில் ரவுடி வெட்டிக் கொலை; 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
-
சரோஜா தேவியின் இறுதி ஊர்வலம் துவங்கியது: சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு
Advertisement
Advertisement