ரயில் விபத்தில் இறந்த மாணவர்கள் குடும்பத்திற்கு திருமாவளவன் உதவி

கடலுார் :கடலுார் அருகே ரயில் விபத்தில் இறந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு, வி.சி., தலைவர் திருமாவளவன் எம்.பி., நிவாரணம் வழங்கினார்.

கடலுார் அடுத்த செம்மங்குப்பத்தில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் இறந்தனர். கடலுார் வந்த வி.சி.,கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., ரயில் விபத்தில் இறந்த மாணவர்களின் வீட்டிற்கு சென்று, அவர்களது பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.

காட்டுமன்னார்கோவில் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., கடலுார் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், நிர்வாகிகள் ஜெயக்குமார், மாவட்ட செயலாளர்கள் அறிவுடைநம்பி, அரங்க தமிழ்ஒளி, மணவாளன், ராஜேந்திரன், எழில்இமயன், திருமேனி, முல்லைவேந்தன், ஜான்சன், இளையராஜா, செல்வம், துாயவன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement