பயன்பாடு இல்லாத சேவை மைய கட்டடம்

போடி: போடி அருகே மணியம்பட்டியில் ரூ.13 லட்சம் செலவில் கட்டப்பட்ட கிராம ஊராட்சி சேவை மைய கட்டடம் பயன்பாடு இன்றி காட்சி பொருளாக உள்ளது.

இங்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.13.20 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகத்துடன் கூடிய கிராம ஊராட்சி சேவை மைய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. திறப்பு விழாவிற்கு பின் சில மாதங்கள் மட்டுமே செயல்பட்டது. தற்போது பல மாதங்களாக பூட்டி பயன்பாடு இன்றி உள்ளது. இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கும் கூடாரமாக பயன்படுத்தி வருகின்றனர்.

Advertisement