முதியவர் மீது போக்சோ

போடி: போடி பங்காரு தெருவை சேர்ந்தவர் தனிக்கொடி 65. இவர் அதே பகுதியை சேர்ந்த எட்டு வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ய முயன்று உள்ளார்.

அவரிடம் இருந்து தப்பி வந்து சிறுமி பெற்றோரிடம் கூறி உள்ளார். சிறுமியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் செய்துள்ளனர். போடி டவுன் போலீசார் தனிக்கொடி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement