'கைது செய்ய வேண்டும்': கிருஷ்ணசாமி

தமிழக அரசின் தலைமைச் செயலர் முருகானந்தத்திடம், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கள், சாராயம் போன்றவற்றை வடித்தல், விற்றல், குடித்தல் போன்றவை தமிழக மதுவிலக்கு சட்டத்தின்படி தடை செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தெரிந்திருந்தும், நாம் தமிழர் கட்சி சீமானும், அவரது ஆதரவாளர்களும், கள் இறக்கி குடித்து, அதை அங்கிருந்தவர்களுக்கும் கொடுத்து குடிக்கச் செய்துள்ளனர்.

'கள் இறக்குவோரை கைது செய்தால், போலீஸ் நிலையங்கள் உடைத்தெறியப்படும்' என, போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில், மேடையில் அரிவாளை துாக்கி காட்டி எச்சரித்துள்ளனர். இது சட்டவிரோத செயல். தண்டனைக்குரிய குற்ற செயல். கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சீமான் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்ய வேண்டும். வரும் 27ம் தேதி, திருச்சியில் நடக்க உள்ள கள் விடுதலை மாநாட்டை தடை செய்ய வேண்டும். சட்டத்தை மீறும் சமூகவிரோத சக்திகளை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என, அனைத்து மாவட்ட போலீஸ் எஸ்.பி.,க்களுக்கும் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement