அ.தி.மு.க., பழனிசாமிக்கு பலாப்பழ மாலையுடன் வரவேற்பு

பண்ருட்டி : பண்ருட்டி வந்த அ.தி.மு.க., மாநில செயலாளர் பழனிசாமிக்கு, ஒரு டன் பலாப்பழ மாலையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அ.தி.மு.க., சார்பில் 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்கிற பிரசார பயணம் பண்ரூட்டி தொகுதியில் நேற்று நடந்தது. பிரச்சார பயணத்திற்கு வந்த, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு, பண்ருட்டி நகர அ.தி.மு.க.செயலாளர் மோகன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, பழனிசாமிக்கு கடலுார் சாலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒரு டன் எடை கொண்ட பிரமாண்ட ரோஜாப்பூ மாலை அணிவித்தனர்.
பண்ருட்டி பஸ் நிலையம் முன்பு ஒரு டன் எடையுள்ள பிரமாண்ட பலாப்பழ மாலை கிரேன் மூலம் அவருக்கு அணிவிக்க ஏற்பாடு செய்திருந்தனர். இந்த வரவேற்பை தனது பிரச்சார பஸ்சில் இருந்து பழனிசாமி ஏற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் கனகராஜ், ஒன்றிய செயலாளர் ராமசாமி, பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒன்றிய துணை செயலாளர் ஆனந்தராஜ், முன்னாள் தலைவர்கள் ராஜா, முருகன், புஷ்பாவதி சிவசந்திரன், நகர அவை தலைவர் ராஜதுரை, இணை செயலாளர் சத்யா கலைமணி, நகர ஜெ., பேரவை செயலாளர் செல்வம், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் கார்த்திக், மாவட்ட பரிதிநிதி சர்புன்னிசா சலாவூதின், சீனுவாசன், கவுன்சிலர்கள் முருகன், சரளா மோகன், பிரியா பாக்கியராஜ், சுவாதி பாக்கியராஜ், முன்னாள் கவுன்சிலர் காணை ரமேஷ், மாவட்ட ஜெ., பேரவை துணை செயலாளர் வெங்கடேசன், கோபாலகிருஷ்ணன், முன்னாள் தர்கா கமிட்டி தலைவர் இஸ்மாயில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
காமராஜருக்கு மரியாதை செலுத்துகிறேன்; பிரதமர் மோடி தமிழில் பதிவு
-
டிரம்பின் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு சுப்ரீம்கோர்ட் ஒப்புதல்: கல்வித்துறையில் 1400 பேர் டிஸ்மிஸ்
-
சோறுபோட பள்ளி என்ன ஹோட்டலா என கேட்போர் அன்று இல்லை; முதல்வர் ஸ்டாலின் சாடல்
-
போர் நிறுத்தத்தை நாங்கள் நம்பவில்லை, எந்தவொரு புதிய சாகசத்திற்கும் தயார்: ஈரான் புது அறிவிப்பு
-
நம் குழந்தைகள் ஹிந்தி கற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை: ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் ஆதரவு
-
114 வயது மாரத்தான் 'ஜாம்பவான்' பவுஜா சிங் சாலை விபத்தில் மரணம்!