போர் நிறுத்தத்தை நாங்கள் நம்பவில்லை, எந்தவொரு புதிய சாகசத்திற்கும் தயார்: ஈரான் புது அறிவிப்பு

3


டெஹ்ரான்: “ நாங்கள் போர் நிறுத்தத்தை நம்பவில்லை. எந்தவொரு புதிய ராணுவ சாகசச் செயல்களுக்கும் தீர்க்கமாக பதிலளிக்க தயாராக இருக்கிறோம்" என ஈரான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அஜீஸ் நசீர்சாதே தெரிவித்துள்ளார்.


மேற்காசிய நாடான ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பது தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் என்று கூறி, கடந்த மாதம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது; ஈரானும் பதிலடி தந்தது. 12 நாட்கள் இரு தரப்பிலும் மாறி மாறி தாக்குதல் தொடர்ந்தது.


இஸ்ரேல் கடந்த மாதம் நடத்திய தாக்குதலில் ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் காலில் காயத்துடன், நுாலிழையில் உயிர் தப்பியதாக, அந்நாட்டின் ராணுவத்துக்கு சொந்தமான பார்ஸ் ஊடகம் கூறியிருந்தது.


இந்நிலையில் ஈரான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அஜீஸ் நசீர்சாதே கூறியதாவது: ஈரான் மோதலை விரிவுபடுத்த முற்படவில்லை என்றாலும், அது தனது பாதுகாப்பைக் குறைத்துவிடவில்லை. நாங்கள் போர்நிறுத்தத்தை நம்பவில்லை.

எந்தவொரு புதிய ராணுவ சாகசச் செயல்களுக்கும் தீர்க்கமாக பதிலளிக்க தயாராக இருக்கிறோம். எந்தவொரு ஆக்கிரமிப்பாளர்களின் சாகசச் செயல்களுக்கும் தீர்க்கமாக பதிலடி கொடுப்போம். பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்



இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல்களைத் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், எந்த சூழ்நிலையும் சமாளிக்க தயார் என ஈரான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Advertisement