டிரம்பின் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு சுப்ரீம்கோர்ட் ஒப்புதல்: கல்வித்துறையில் 1400 பேர் டிஸ்மிஸ்

7

வாஷிங்டன்: அமெரிக்காவில் கல்வித்துறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



அமெரிக்க அதிபரான பின்னர் டிரம்ப் செலவீனங்களை குறைக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார். பல்வேறு அரசு துறைகளில் இருக்கும் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் உத்தரவுகளை அவர் பிறப்பித்து வருகிறார்.


அதன் முக்கிய கட்டமாக, கல்வித்துறையில் இருக்கும் 1300க்கும் அதிகமானோரை பணி நீக்கம் செய்யும் திட்டத்தை அறிவித்தார். ஆனால் டிரம்பின் நடவடிக்கைக்கு கடும் விமர்சனங்களும் எழுந்தன.


இந்நிலையில், கல்வித்துறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. டிரம்பின் செலவின குறைப்பு நடவடிக்கைக்கு பாஸ்டன் நீதிமன்றம் தடை பிறப்பித்து இருந்தது.


ஆனால் தற்போது அந்த தடை உத்தரவை தகர்க்கும் வகையில் அந்நாட்டு உச்சநீதிமன்றம், பணியாளர்களை நீக்க ஒப்புதல் தந்திருக்கிறது. நீதிமன்றத்தின் இந்த அனுமதியை வரவேற்றுள்ள டிரம்ப், நாடு முழுவதும் உள்ள பெற்றோர், மாணவர்களுக்கு நன்றி என்று கூறி உள்ளார்.


மேலும் தனது நிர்வாகம் எடுக்க இருக்கக்கூடிய சில முக்கிய சீர்திருத்தங்களின் தொடக்கமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement