உள்ளாட்சி ஊழியர்கள் போராட்டம்

விழுப்புரம், ஜூலை 15-

தமிழகம் முழுதும் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை மற்றும் மாநில அரசு தணிக்கை துறையில், கடந்த தி.மு.க., ஆட்சியில் கொண்டுவந்த உடன் நிகழ் தணிக்கை நடைமுறையை ஒழிக்கும் நடைமுறையை கண்டிப்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நேற்று நடந்தது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தணிக்கையாளர்கள், பணி செய்யும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்தனர். உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்க மாநில துணை தலைவர் பாபு தலைமையில், நிர்வாகிகள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Advertisement