சங்கராபுரத்தில் இலவச கண் பரிசோதனை

சங்கராபுரம் : சங்கராபுரத்தில், இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

ரோட்டரி கிளப், கோவை சங்கரா கண் மருத்துவமனை, செயின்ட் ஜோசப் அகாடமி மேல்நிலைப்பள்ளி சார்பில் டி.எம்.பள்ளி வளாகத்தில் நடந்த முகாமிற்கு, ரோட்டரி தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் மோகன்தாஸ், பொருளாளர் முனுசாமி, துணை ஆளுனர் சுரேஷ், அறக்கட்டளை தலைவர் ஜனார்த்தனன் முன்னிலை வகித்தனர்.

செயின்ட் ஜோசப் பள்ளி தாளாளர் ஜோசப் சீனிவாசன் முகாமை துவக்கினார்.

முகாமில், 520 பேருக்கு கோவை சங்கரா கண் மருத்துவமனை டாக்டர்கள் பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கினர். 197 பேர், கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு கோவை அழைத்துச் செல்லப்பட்டனர்.

இன்னர்வீல் சங்கத் தலைவர் இந்துமதி தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் ரோட்டரி முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். செயின்ட் ஜோசப் பள்ளி முதல்வர் சாராள் சீனிவாசன் நன்றி கூறினார்.

Advertisement