பைக்குகள் மோதல்: வாலிபர் மரணம்

கோவை; தர்மபுரி மாவட்டம் மாதேமங்கலத்தை சேர்ந்தவர், தருமன், 35. கோவையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் விளாங்குறிச்சி ரோட்டில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரில் பைக்கில் வந்த ஆன்டனிராஜ் என்பவர் தருமனின் பைக் மீது மோதினார். இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த இருவரையும், அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் தருமனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். காயமடைந்த ஆன்டனிராஜ் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement