'கள்' பற்றி அவதுாறு நடவடிக்கை கோரி மனு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் 'கள்' பற்றி அவதுாறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு தென்னை மற்றும் பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:

இந்திய உணவு பட்டியலில் 'கள்' இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் பனை பொருளாதார புரட்சி தானாக வளர்ந்ததாலும், பனை உணவு பொருட்கள் ஆரோக்கியம் தரும் என்பதாலும் அனைத்து தரப்பட்ட மக்களும் பனை விதைகளை நட்டு வருகின்றனர்.

'கள்' இறக்கி விற்பனை செய்வதால் கிராம தற்சார்பு பொருளாதாரமும், மக்களின் ஆரோக்கியமும் மேம்படும். இதன் விற்பனை பெரு நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், சிலர் 'கள்' பற்றி அவதுாறு பரப்புகின்றனர். அவதுாறு பரப்பி, குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement