பெண்ணை தாக்கிய ஒருவர் மீது வழக்கு

விழுப்புரம் : பெண்ணை தாக்கிய போதை ஆசாமி மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் தாமரைகுளத்தை சேர்ந்தவர் சேட்டு மனைவி மாலா, 40; இவரது வீட்டின் எதிரில் கடந்த 11ம் தேதி அதே பகுதியை சேர்ந்த செந்தில் என்பவர் குடிபோதையில் ஆபாசமாக திட்டியுள்ளார். தட்டிக் கேட்ட மாலாவை, செந்தில் திட்டி, தாக்கி, மிரட்டல் விடுத்தார்.

விழுப்புரம் டவுன் போலீ சார் செந்தில் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement