சேதமடைந்த சிறு பாலம் சீரமைப்பது எப்போது?

திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரம் ஊராட்சிக்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் நந்தியாறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே சிறுபாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்த பாலத்தின் தடுப்பு துாண்கள் சேதமடைந்தும், சிமென்ட் தளம் பெயர்ந்தும் உள்ளன. பாலம் பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து வருகிறது. நந்தியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினால், சிறுபாலத்தின் தடுப்பு துாண்கள் உடைந்து விழும் அபாய நிலை உள்ளது.

எனவே, ஊராட்சி நிர்வாகம் சிறுபாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- க.வெற்றியழகன், விநாயகபுரம்.

Advertisement