கல்லா பெட்டியை உடைத்து பணம் திருடியவர் கைது
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காய்கறி மார்க்கெட்டில் 2 கடைகளின் கல்லா பெட்டியை உடைத்து பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி, கமலா நேரு தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜிலு, 52; இவர், கள்ளக்குறிச்சி காய்கறி மார்க்கெட்டில் பூண்டு கடை வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் காலை கடையை திறந்த போது, கல்லா பெட்டி உடைத்து அதில் இருந்த பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதே போன்று அருகே உள்ள பஷீர் என்பவரின் வெற்றிலைக்கடையிலும் பணம் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதி கேமராக்களை ஆய்வு செய்து, பணத்தை திருடிய கருணாபுரம் பழைய காலனியைச் சேர்ந்த சுப்ரமணி மகன் ஆறுமுகம், 20; என்பவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காத்திருப்போம்...காத்திருப்போம்...காலங்கள் வந்துவிடும்; பாட்டு பாடி பதில் அளித்த ராமதாஸ்!
-
பாதுகாப்பற்ற படப்பிடிப்பு : ஒரே ஆண்டில் இரண்டு ஸ்டன்ட் நடிகர்கள் மரணம்
-
மிளகாய் பொடி தூவி, துப்பாக்கியால் சுட்டு இ.கம்யூ., பிரமுகர் படுகொலை; வாக்கிங்கின் போது பயங்கரம்
-
மும்பை ஏர்போர்ட்டில் சிக்கியது ரூ.62 கோடி கோகைன்: பிஸ்கட், சாக்லேட்டுகளில் கடத்திய பெண்
-
திருப்பரங்குன்றம் மலை விவகார வழக்கு: விசாரணையை ஒத்திவைத்தார் 3வது நீதிபதி
-
ஜம்மு காஷ்மீரில் 20 பேருடன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வேன்: 5 பேர் பலி
Advertisement
Advertisement