கவன ஈர்ப்பு போராட்டம்

புதுச்சேரி : புதுச்சேரி பயிற்சியாளர்கள் சங்கம் சார்பில் புதிய விளையாட்டு பயிற்சியாளர்களை நியமிக்க கோரி பள்ளி கல்வித்துறை அலுவலகம் எதிரே கவன ஈர்ப்பு போராட்டம் நடந்தது.

சங்கத் தலைவர் ஆனந்த பாஸ்கரன் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜசோழபெருமாள் முன்னிலை வகித்தார். இதில், பல்வேறு விளையாட்டு பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டத்தில், புதுச்சேரியில் காலியாக உள்ள அனைத்து விளையாட்டு பயிற்சியாளர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். என்.ஐ.சி., பயிற்சி முடித்த உள்ளூர் விளையாட்டு நிபுணர்களுக்கு பயிற்சியாளர் பணியிடங்களில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். மற்ற மாநிலங்களை போன்று, புதுச்சேரியிலும் பயிற்சியாளர் வயது வரம்பை 45 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement