மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி : புதுச்சேரி மா.கம்யூ., சார்பில் என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரி நேரு விதியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

மூத்த தலைவர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், பெருமாள், தமிழ்ச்செல்வன், பிரபுராஜ், சீனுவாசன், கலியமூர்த்தி, சத்தியா, நகர கமிட்டி செயலாளர் ஜோதிபாசு, உழவர்கரை நகர செயலாளர் ராம்ஜி, மண்ணாடிபட்டு கமிட்டி செயலாளர் அன்புமணி, பாகூர் கமிட்டி செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, என்.ஆர்.காங்., பா.ஜ., அரசின் ஊழல், மக்கள் வரி பணம் வீணடிப்பு, மோசடி செய்பவர்களை மக்கள் பிரதிநிதிகளாக நியமித்து உள்ளதை எதிர்த்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement