இரண்டாவது திருமணம் செய்த கணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு

புதுச்சேரி : இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பாகூர் அடுத்த மதிகிருஷ்ணாபுரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் புஷ்பலதா, 28; இவர் காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லுார்காந்தி நகரைச் சேர்ந்த ராஜூ, 30; என்பவரை கடந்த 2014ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் அரக்கோணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் உறவினர்கள் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது. தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது.

இந்நிலையில் தம்பதிகளுக்கு கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021ம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். புஷ்பலதா தாய்வீடான மதிகிருஷ்ணபுராத்தில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இதற்கிடையில் ராஜூ கடந்த 20.02.2022 அன்று மதிகிருஷ்ணாபுரத்தில் உள்ள மனைவியை கத்தியால் தாக்கினார்.

இதுதொடர்பான வழக்கு புதுச்சேரி கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இற்கிடையே ராஜூ வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டு, அவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பது புஷ்பலதாவிற்கு தெரியவந்தது.

இதுகுறித்து புஷ்பலதா புதுச்சேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகார் வில்லியனுார் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

மகளிர் போலீசார் விசாரணைக்கு பின் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவர் ராஜூ உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். . மேலும் சம்பவம் நடந்த இடம் கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட இடம் என்பதால் மேல் விசாரணைக்கு கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement