முன்னாள் அமைச்சர் நினைவு கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு

புதுச்சேரி : கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு விக்னேஷ் கண்ணன் பரிசு வழங்கி பாராட்டினார்.

முன்னாள் அமைச்சர் கண்ணன் நினைவு கோப்பை இரண்டாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி, லாஸ்பேட்டை தாகூர் கலைக் கல்லுாரி மைதானத்தில் நடந்தது. இதில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த 60 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.

ஸ்டோனர் கிரிக்கெட் கிளப்பினர் இணைந்து நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

முன்னாள் அமைச்சர் கண்ணனின் மகன் விக்னேஷ் கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெற்றி பெற்ற அணிகளுக்கு கண்ணன் நினைவு கோப்பை மற்றும் தனது சொந்த செலவில் ஒரு லட்சம் அளவிற்கான ரொக்கப் பரிசுகளையும் வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் ஸ்டோனர் கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள், கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement