சிறைத்துறை மீது புகார் அரசு விசாரிக்க வேண்டும்

புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த கைதி ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கியதில், அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த சிறை தலைமைக் காவலர் படுகாயமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ஏற்கனவே, புழல் சிறையில், சட்டவிரோதமாக மொபைல் போன்கள் பயன்படுத்துவதாகவும், கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பதாகவும் புகார் எழுந்தது. அதை கண்டுகொள்ளாத சிறைத் துறையால், தற்போது சிறை தலைமைக் காவலர் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கு, அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கைதிகளுக்கு, சிறைத்துறை உயர் அதிகாரி ஒருவர் வழங்கிய அபரிமிதமான சலுகைகளே இதற்கு காரணம் என, சிறைக் காவலர்கள் வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலை தொடராமல் இருக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- தினகரன்,

பொதுச்செயலர், அ.ம.மு.க.,

Advertisement