ஆக., 3 முதல் பிரேமலதா பிரசாரம்
சென்னை : தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தன் முதற்கட்ட பிரசாரத்தை ஆகஸ்ட் 3ல் துவங்கவுள்ளார்.
சட்டசபை தேர்தலில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, தே.மு.தி.க., தரப்பில் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கூட்டணி தொடர்பான அறிவிப்பை, ஜனவரி 9ல், கடலுாரில் நடக்கும் மாநில மாநாட்டில் அறிவிக்கப் போவதாக அக்கட்சி பொதுச்செயலர் பிரேமலதா கூறி வருகிறார்.
இந்நிலையில், தன் முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை, ஆகஸ்ட் 3ம் தேதி துவங்குவதாக பிரேமலதா அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் அக்னி மூலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அமைந்துள்ளது. இங்கு, எந்த காரியத்தை தொட்டாலும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை தே.மு.தி.க., தலைமைக்கு உள்ளது.
இங்கிருந்து தான் தன் தேர்தல் பிரசாரத்தை, தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்த் துவங்குவது வழக்கம்.
அதன்படி, பிரேமலதாவும் அங்கிருந்து பிரசாரத்தை துவங்கவுள்ளார். இதற்கான அறிவிப்பை, தே.மு.தி.க., வெளியிட்டு உள்ளது.

மேலும்
-
பினராயி விஜயன் பெயரில் மும்பை பங்குச்சந்தைக்கு வெடிகுண்டு மிரட்டல்!
-
645 பணியிடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு அறிவிப்பு
-
முத்துக்குமார சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா
-
மேம்பால சுவர் பூங்காக்கள் திருமங்கலத்தில் அலங்கோலம்
-
ரயில்வே துறை சீரழிவுக்கு தனி பட்ஜெட் ரத்துதான் காரணம்: ராமதாஸ் குற்றச்சாட்டு
-
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம்; மக்களிடம் மனுக்களை பெற்றார் முதல்வர் ஸ்டாலின்!