பிரதிஷ்டை தின விழா

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருள்தரும் ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்டை தின விழா நடந்தது.

விழாவையொட்டி, கணபதி ஹோமம், ஐயப்பன் சுவாமிக்கு மூலமந்திர ஹோமங்கள் நடந்தது. பரிவார மூர்த்திகளான நாகராஜபிரபு, பாலமுருகன், மஞ்சள் மாதா, கருப்பண்ணசாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 108 சங்குகளில் புனித நீர் நிரப்பி யாகம் நடத்தி ஐயப்பனுக்கு சங்காபிஷேகம் செய்து தீபாராதனை நடந்தது.

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைகளை ராமு பூசாரி செய்தார். செயலாளர் ராதா, பொருளாளர் பழனி, சிவகுருநாதன், சுவாமிபிள்ளை, சேகர், கல்யாணசுந்தரம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement