பிரான்ஸ் தேசிய தினம் புதுச்சேரியில் கடைபிடிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் பிரான்ஸ் தேசிய தினம் கடைபிடிக்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டில் கடந்த 1789-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி மக்கள், புரட்சியின் மூலம் மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சியை நிறுவினர். இதன் நினைவாக ஆண்டுதோறும் ஜூலை மாதம் 14-ம் தேதி பிரான்ஸ் தேசிய தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.அதன்படி, புதுச்சேரியில் 236-வது பிரான்ஸ் தேசிய தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி கடற்கரை சாலையில் உள்ள போர் வீரர் நினைவுத் துாணில் புதுச்சேரிக்கான பிரான்ஸ் நாட்டுத் துணைத் தூதர் எட்டியென் ரோலண்ட்-பியக் புதுச்சேரி அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், இந்தியா, பிரான்ஸ் இரு நாட்டுதேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு, தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.

Advertisement