கும்பாபிேஷகம்

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த வீரட்டிக்குப்பம் கிராமத்தில் உள்ள விநாயகர் மற்றும் முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, முதல்கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

நேற்று காலை 7:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜையும், பூர்ணாஹூதி, காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. காலை 9:45 மணிக்கு, விநாயகர், முத்து மாரியம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement