முன்னாள் எம்.எல்.ஏ., தலைமையில் பொறியாளரிடம் கோரிக்கை மனு

புதுச்சேரி : முத்தியால்பேட்டையில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டுமென தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா சரவணன், பொதுமக்களுடன் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வத்தை சந்தித்து மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

முத்தியால்பேட்டையில் 35 ஆண்டுகளுக்கு முன் பாதாள சாக்கடை திட்டம் துவங்கப்பட்டது. ஆனால், இதுவரையில் போதிய பராமரிப்பு இன்றியும், நகர வளர்ச்சிக்கு ஏற்ப தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்படவில்லை.

பாதாள சாக்கடைகள் அமைக்கப்பட்டு 35 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் போதிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல், முத்தையா முதலியார் வீதி, அருணகிரி செட்டியார் தெரு, பிள்ளையார் கோவில் வீதி, காந்தி விதி சந்திப்பு, பாரதிதாசன் விதி, காந்தி விதி மணிகூண்டு அருகில், ஒத்தவாடை தெரு, வேலாயுதம் பிள்ளை வீதி, உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைகள் உடைந்தும், பல இடங்களில் அடைப்புகளும் ஏற்பட்டுள்ளன.

பாதாள சாக்கடை தொட்டிகள் நிரம்பி வழிந்து, கழிவுநீர் சாலைகளில் ஓடுகிறது. இதனால் முத்தியால்பேட்டை தொகுதி முழுதும் சுகாதாரக்கேடு சூழ்நிலை நிலவி வருகிறது.

எனவே, போர்கால அடிப்படையில் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடை அடைப்பு பணியை சரி செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement