பகுதி நேர வேலை என வரும் விளம்பரத்தை நம்ப வேண்டாம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி : பகுதி நேர வேலையாக வீட்டில் இருந்தபடி அதிக பணம் சம்பாதிக்கலாம் என வரும் விளம்பரத்தை நம்பி முதலீடு செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் கூறுகையில்,
இன்றைய காலத்தில் பெண்கள் மற்றும் வேலை இல்லா பட்டதாரிகள் தனது மொபைல் போன்களில் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற செயலிகளின் மூலம் வீட்டிலே இருந்தபடி ஆன்லைனில் வேலை தேடி வருகின்றனர். இதனை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் 'டெலிகிராம் டாஸ்க்' என்ற பெயரில் வீட்டில் இருந்து வேலை செய்யுங்கள், உட்கார்ந்த இடத்திலேயே எளிதாக சம்பாதியுங்கள் என்று விளம்பரங்களை போடுகின்றனர்.
அதனைநம்பி, விளம்பரத்தை பார்க்கும் இளைஞர்கள் மற்றும் பெண்களை, அறிமுகம் இல்லாத நபர் வாட்ஸ் ஆப் அல்லது இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்டு ஒரு டெலிகிராம் குழுவில் இணைக்கிறார். அவ்வாறு இணைக்கப்பட்டவர்களிடம் 'பார்ட் டைம்' அல்லது 'முழு நேர' வேலை வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும், அந்த குழுவில் ஏதேனும் போஸ்டினை ரிவார்ட்ஸ் அல்லது ரேட்டிங் செய்தால் உங்களுக்கு பணம் வழங்கப்படும் என்று ஏமாற்றுகின்றனர்.
இதனை நம்பி எளிதான வேலையை செய்ததால், அடுத்த நிலையான 'கோல்ட் ப்ரீமியம்' உள்ளிட்ட பல்வேறு படிநிலைகள் உள்ளது. அதற்கு செல்ல வேண்டும் என்றால் நீங்கள் லட்சக்கணக்கில் முன்தொகை கட்ட வேண்டும் என்று சிறிது சிறிதாக பணத்தை பறிக்கின்றனர்.
இதற்கிடையே, அது போலி எனதெரியவந்து பணத்தை திரும்ப கேட்டால், மேலும் பணம் அனுப்பினால் தான் திரும்பத் தருவோம் என்ற சைபர் மோசடி செய்கின்றனர்.
இதுபோன்று புதுச்சேரியில் இதுவரையில் 200க்கும் மேற்பட்ட நபர்கள், 5 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி கும்பலிடம் பணத்தை ஏமாந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன. எனவே விளம்பரங்களை பார்த்து இளைஞர்கள் மற்றும் பெண்கள் யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
மேலும்
-
மிளகாய் பொடி தூவி, துப்பாக்கியால் சுட்டு இ.கம்யூ., பிரமுகர் படுகொலை; வாக்கிங்கின் போது பயங்கரம்
-
மும்பை ஏர்போர்ட்டில் சிக்கியது ரூ.62 கோடி கோகைன்: பிஸ்கட், சாக்லேட்டுகளில் கடத்திய பெண்
-
திருப்பரங்குன்றம் மலை விவகார வழக்கு: விசாரணையை ஒத்திவைத்தார் 3வது நீதிபதி
-
ஜம்மு காஷ்மீரில் 20 பேருடன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வேன்: 5 பேர் பலி
-
சேலத்தில் ரவுடி வெட்டிக் கொலை; 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
-
சரோஜா தேவியின் இறுதி ஊர்வலம் துவங்கியது: சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு