கெங்கைகொண்டான் பேரூராட்சியில் பழனிசாமிக்கு வரவேற்பு

மந்தாரக்குப்பம், : கெங்கைகொண்டான் பேரூராட்சிக்கு வந்த அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு, கடலுார் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசாரம் பயணம் மேற்கொண்டு வருகிறார். முன்னதாக வடலுாரில் இருந்து கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதிக்கு வந்த அவருக்கு, கடலுார் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., தலைமையில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, பேண்டு வாத்தியம் முழுங்க, நடனமாடி வரவேற்பு அளித்தனர்.

சாலையில் இருபுறமும் பொதுமக்கள், கட்சியினர் நின்று வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில், ஜெ.,பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், நிர்வாகிகள் மனோகரன், முகமதுநாசர், ராஜ்மோகன், கனக சிகாமணி, அமுல்ராஜ், சவுந்தராஜன், சதீஷ்குமார், ராஜ்குமார், அன்வர்தீன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மணி, ஒன்றிய செயலாளர் மருதை முனுசாமி, சின்னரகுராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement