சினிமாவில் சரி என்பதை அரசியலில் தவறு என்பதா?

8

வரும் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக, ஒவ்வொரு தி.மு.க.,காரரும், வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும். ஏனென்றால், பா.ஜ.,வினர் எங்கெல்லாம் வெற்றி பெற்றுள்ளனரோ, அங்கெல்லாம் வாக்காளர் பட்டியல் முதல் கொண்டு, ஓட்டு மெஷின் வரை முறைகேடு செய்துதான் வெற்றி பெற்றுள்ளனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஏற்கனவே டில்லியில் இப்படி குளறுபடி செய்தவர்கள், தற்போது, பீஹாரிலும் அதை செய்யத் துடிக்கின்றனர்.


லாக்-அப் மரணங்களை, யாரும் ஆதரிக்கவில்லை. ஆனால், சினிமாவில் நடிக்கும்போது, லாக்-அப் மரணங்களுக்கு சாதகமாக காட்சி அமைப்புகளை வைத்தவர்கள், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்ததும், அதை எதிர்க்கின்றனர். இப்படியெல்லாம் முரண்பட்டு அரசியல் செய்ய வருவோரை மக்கள் அடையாளம் காண வேண்டும்.

- கனிமொழி, தி.மு.க., - எம்.பி.,

Advertisement