அரசை மாற்றும் ஜெலன்ஸ்கியின் திட்டம்: உக்ரைன் பிரதமர் ராஜினாமா

2

கீவ்: உக்ரைன் அரசில் பெரிய அளவில் மாற்றம் செய்ய அதிபர் ஜெலன்ஸ்கி திட்டமிட்டுள்ள நிலையில், அந்நாட்டு பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் பதவியை ராஜினாமா செய்தார்.


உக்ரைன் மீது கடந்த 3 ஆண்டுகளாக ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. எவ்வளவு முயற்சிகள் மற்றும் தடைகள் விதித்தாலும் ரஷ்யா எதற்கும் அசைந்தபாடில்லை.


இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது அரசை மிகப்பெரிய அளவில் மறுசீரமைக்கும் பணியில் இறங்கி உள்ளார். இதன்படி, அந்நாட்டு பிரதமராக இருக்கும் டெனிஸ் ஷ்மிஹால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை ஜெலன்ஸ்கியிடம் வழங்கினார்.


இதனைத் தொடர்ந்து பொருளாதாரத்துறை அமைச்சராக இருக்கும் யூலியா ஸ்வைரிடென்கோ என்ற பெண் புதிய பிரமராக நியமிக்கப்பட்டு உள்ளார். பதவி விலகிய டெனிஸ் ஷமிஹால் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியேற்கிறார்.

Advertisement