கருணாநிதி சிலை மீது 'பெயின்ட்' ஊற்றியது யார்?

2

சேலம் : சேலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை மீது கருப்பு பெயின்ட் ஊற்றியது யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.


சேலம், அண்ணா பூங்கா அருகே, முன்னாள் முதல்வர் கருணாநிதி முழு உருவ வெண்கல சிலை உள்ளது. அச்சிலையை வலது புறம் முழுதும் கருப்பு பெயின்ட் படிந்திருந்தது.


கருணாநிதி பெயர் பொறிக்கப்பட்ட பீடம் முழுதும், பெயின்ட் நிரம்பி வடிந்திருந்தது. நேற்று காலை அந்த வழியே சென்ற, தி.மு.க.,வினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.


தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் திரண்டனர். மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், அஸ்தம்பட்டி உதவி கமிஷனர் அஸ்வினி பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்கள், அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'மர்ம நபர்கள், கருப்பு பெயின்ட் ஊற்றி, குச்சி மூலம் பெயின்ட்டை சிலை மீது தடவியது தெரிய வந்துள்ளது. சிலை அருகே, 2 லிட்டர் தகர பெயின்ட் டப்பாவை கைப்பற்றியுள்ளோம். அங்கு சிசிடிவி கேமரா இல்லாததால், பிரதான சாலையில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்கிறோம்' என்றனர்.


இதனிடையே மாநகராட்சி ஊழியர்கள், சிலை மீது ஊற்றப்பட்ட கருப்பு பெயின்ட்டை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.



@block_B@

ஏற்புடையது அல்ல!

கருணாநிதியின் வெண்கல சிலை மீது, சமூக விரோத சக்திகள், கருப்பு பெயின்ட் வீசி அவமதித்துள்ளனர். எம்.ஜி.ஆர்., சிலைக்கு காவித்துண்டு போர்த்துவது, ஈ.வெ.ரா., அம்பேத்கர் சிலைகளை அவமதிப்பது, திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசுவது போன்ற செயல்கள் தொடர்கின்றன. கடந்த காலத்தில், இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களில் பலரும், சங் பரிவார் அமைப்பை சார்ந்தவர்கள் என்பதை பார்க்க முடிந்தது. இது நாகரிக சமூகத்திற்கு ஏற்புடையது அல்ல. -சண்முகம்மாநில செயலர், மார்க்சிஸ்ட் கம்யூ.,block_B

Advertisement