சீன வெளியுறவு அமைச்சர் பிரதமர் மோடியை பாராட்டுவார்: ராகுல் சொல்கிறார்

புதுடில்லி; '' சீன வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்து, இரு நாட்டு உறவில் சமீபத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து பிரதமர் மோடியை பாராட்டுவார் என யூகிக்கிறேன், '' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களுடன் பீஜிங்கில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து பேசினேன். ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி யின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
@twitter@https://x.com/DrSJaishankar/status/1944966397911818322
twitter
நமது இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு விளக்கப்பட்டது. அந்த விஷயத்தில் நமது தலைவர்களின் வழிகாட்டுதலை மதிக்கிறோம் எனத் தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: இந்தியா - சீனா உறவுகளில் சமீபத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து சீன வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்து மோடியை பாராட்டுவார் என யூகிக்கிறேன். இந்தியாவின் வெளியுறவு கொள்கையை அழிக்கும் வகையில் சர்க்கசை வெளியுறவு அமைச்சர் நடத்தி வருகிறார். இவ்வாறு அந்த பதிவில் ராகுல் தெரிவித்துள்ளார்.


மேலும்
-
ஒடிஷாவில் தீக்குளித்த மாணவி மரணம்: எதிர்க்கட்சிகள் நாளை பந்த் அறிவிப்பு
-
மியான்மர் எல்லையில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது: என்.எஸ்.சி.என்.,
-
சமோசாவுக்கு எச்சரிக்கை மத்திய அரசு மறுப்பு
-
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிக்கான... நோக்கம் என்ன? தேர்தல் கமிஷனிடம் விளக்கம் கேட்கும் தெலுங்கு தேசம்
-
கருணாநிதி சிலை மீது 'பெயின்ட்' ஊற்றியது யார்?
-
தி.மு.க., கூட்டணியில் 25 'சீட்' திருமாவளவன் அடுத்த 'மூவ்'