சமோசாவுக்கு எச்சரிக்கை மத்திய அரசு மறுப்பு

புதுடில்லி : சமோசா, ஜிலேபி, பக்கோடா போன்றவற்றில் உள்ள சர்க்கரை, கொழுப்புச்சத்துகளின் அளவு, அது உடலுக்கு ஏற்படுத்தும் தீங்கு குறித்த எச்சரிக்கை வாசகங்களை கடைகளின் வாசலில் வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, நேற்று முன்தினம் தகவல் வெளியானது.


இதற்காக, மஹாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை உணவகத்தில், சோதனை ஓட்டமாக இந்த எச்சரிக்கை வாசகம் வைக்கப்பட உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.



இதுபோன்ற எந்த உத்தரவையும், மத்திய சுகாதாரத்துறை பிறப்பிக்கவில்லை என மத்திய அரசு மறுத்துள்ளது.

Advertisement